search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி விலகல்"

    • அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.
    • வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்குகள் 2022-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான இந்த வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

    அப்போது நீதிபதி, "அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதனால், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுறேன்.

    இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்" என்று கூறினார்.

    சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அறிவித்துள்ளார். #SaradhaScam #CBI

    புதுடெல்லி:

    சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள், எல்.நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கன்னா ஆகிய 3 பேர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகுவதாக நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அறிவித்தார். மேலும் இந்த வழக்கில் மே.வங்காள அரசு சார்பில் வக்கீல்ஆக ஆஜராக போவதாகவும் கூறினார்.

    அதை தொடர்ந்து விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு பெஞ்ச் ஒத்தி வைத்தது. #SaradhaScam #CBI

    அயோத்தி வழக்கில் இருந்து நீதிபதி லலித் விலகியதால், வழக்கு இழுத்தடித்துக் கொண்டே வருவது துரதிருஷ்டவசமானது என ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. கவலை தெரிவித்துள்ளது. #SC #AyodhyaCase #JusticeUULalit #RSS #VHP
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. 
     
    இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
     
    இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரசூட், யூ.யூ.லலித் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.

    இந்த அமர்வு 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, இந்த அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யூ.யூ.லலித் இன்று தெரிவித்தார். அவர் விலகியதால் இந்த அமர்வுக்கு புதிதாக இன்னொரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் 29-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி லலித் விலகியதால், வழக்கு இழுத்தடித்துக் கொண்டே வருவது துரதிருஷ்டவசமானது என ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. வருத்தம் தெரிவித்துள்ளது. #SC #AyodhyaCase #JusticeUULalit #RSS #VHP
    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட் அமர்வில் இருந்து நீதிபதி யூ.யூ.லலித் விலகியதால் 29-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. #SC #AyodhyaCase #JusticeUULalit
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
     
    இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து விசாரணை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரசூட், யூ.யூ.லலித் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.



    இந்த அமர்வு 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யூ.யூ.லலித் இன்று தெரிவித்தார்.

    இன்று காலை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன்னர் அயோத்தி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு முஸ்லிம் இயக்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தாவான், ‘இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான யூ.யூ.லலித் கடந்த 1994-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் சார்பில் ஆஜரானவர்’ என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் சுட்டிக்காட்டினார்.

    அதனால், இந்த அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என நான் கோரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இதைகேட்ட நீதிபதி யூ.யூ.லலித் இந்த அமர்வில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன் என உடனடியாக தெரிவித்தார்.

    அவர் விலகியதால் இந்த அமர்வுக்கு புதிதாக இன்னொரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் 29-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. #SC #AyodhyaCase #JusticeUULalit 
    ஊழல் வழக்கில் நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகளுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி, நவாஸ் மீதான மற்ற இரு வழக்கு விசாரணையில் இருந்து திடீரென விலகியுள்ளார். #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

    தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நவாஸ் ஷரிப் மீதுள்ள மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணையை அடிடாலா சிறை வளாகத்தில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 

    நிலுவையில் இருக்கும் மேலும் இரு ஊழல் வழக்குகளை தற்போதைய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர் விசாரிக்க கூடாது. ஏற்கனவே, இந்த வழக்குகளின் சாதக-பாதகங்கள் பற்றி அவர் வெளிப்படையாக பொதுவெளியில் விமர்சித்துள்ளதால் முஹம்மது பஷீருக்கு வேறு நீதிபதியிடம் இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நவாஸ் ஷரிப், மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் சப்தர் சார்பில் நேற்று 7 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்க உள்ள நிலையில், தேசிய பொறுப்புடமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர், நவாஸ் ஷெரீப் மீதான மற்ற இரு வழக்குகளையும் விசாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். 

    இந்த விலகல் முடிவு தொடர்பாக இஸ்லாமாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு பஷீர் எழுதியுள்ள கடிதத்தில், நவாஸ் மீதான மற்ற இரு வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை வேறு நீதிபதிக்கு மாற்றுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
    ×